ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் பலத்த மழை


ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் பலத்த மழை
x
தினத்தந்தி 12 Dec 2021 11:19 PM IST (Updated: 12 Dec 2021 11:19 PM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது.

ராமேசுவரம்,

ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது.

பலத்த மழை

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகின்றது. அதுபோல் இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகின்றது.
இந்த நிலையில் ராமேசுவரம் பகுதியில் நேற்று காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. அதுபோல் பகல் முழுவதும் மழை விட்டு விட்டு பெய்தது. பலத்த மழையால் கோவிலின் கிழக்கு ரதவீதி சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. பஸ் நிலையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையான ராம தீர்த்தம் பகுதியிலும் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.

தனுஷ்கோடி

இதேபோல் தனுஷ்கோடி பகுதியிலும் நேற்று 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது.அதுபோல் நேற்று பகல் முழுவதுமே தனுஷ்கோடி பகுதியில் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது.
தனுஷ்கோடி பகுதியில் மழையில் நனைந்தபடியே ஏராளமான சுற்றுலா பயணிகள் கடற்கரையில் நின்றபடி கடல் அழகை பார்த்து ரசித்து விட்டு சென்றனர்.

Next Story