சாலை ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரி உத்தரவு


சாலை ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரி உத்தரவு
x
தினத்தந்தி 12 Dec 2021 11:20 PM IST (Updated: 12 Dec 2021 11:20 PM IST)
t-max-icont-min-icon

ஏலகிரிமலை-பொன்னேரி கூட்ரோட்டில் சாலை ஆக்கிரமிப்பை அகற்ற மண்டல நெடுஞ்சாலைத்துறை அதிகாரி உத்தரவிட்டார்.

ஜோலார்பேட்டை

ஏலகிரிமலை-பொன்னேரி கூட்ரோட்டில் சாலை ஆக்கிரமிப்பை அகற்ற மண்டல நெடுஞ்சாலைத்துறை அதிகாரி உத்தரவிட்டார்.

சாலை விரிவாக்க பணி

ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரி கூட்ரோடு பகுதியில் ஏலகிரிமலை சாலை பிரிகிறது. ஏலகிரிமலைக்கு செல்லும் சாலை குறுகியதாக இருந்தது. இதனால் அந்தச் சாலையில் விடுமுறை நாட்களிலும், கோடை விழா நடக்கும் நாட்களிலும் சுற்றுலா பயணிகள் போக்குவரத்து நெரிசலால் அவதிப்பட்டு வந்தனர்.

எனவே போக்குவரத்து நெரிசல், விபத்தை தடுக்க அதிகாரிகள் ஏலகிரிமலை அடிவாரத்தில் இருந்து பொன்னேரி கூட்ரோடு வரை அகலப்படுத்தி இருவழிகளாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். அதற்கான நிதி ஒதுக்கி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சாலை விரிவாக்கப் பணி தொடங்கி நடந்து வந்தது.

நோட்டீசு

பொன்னேரி கூட்ரோடு பகுதியில் இருந்து சின்னபொன்னேரி வரை ஏலகிரிமலைக்கு செல்லும் நெடுஞ்சாலையில் சாலையோரம் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த 3 மாதத்துக்கு முன்பு அதிகாரிகள் மூலம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டது. ஆனால் நேற்று வரை யாரும் ஆக்கிரமிப்புகளை  அகற்றவில்லை.

சாலையை விரிவுப்படுத்துவதற்காக வெட்டப்பட்ட பள்ளங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக செய்தி வெளியானதும், நேற்று திருப்பத்தூர் நெடுஞ்சாலைத்துறை மண்டல பொறியாளர் லோகநாதன் பொன்னேரி கூட்ரோடு பகுதியில் சாலை விரிவாக்கப் பணியை ஆய்வு செய்தார். அப்போது அவர், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சாலை விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார்.

அதன்பேரில் சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.

Next Story