லாரி அதிபர் கொலை வழக்கில் தம்பதி கைது


லாரி அதிபர் கொலை வழக்கில் தம்பதி கைது
x
தினத்தந்தி 12 Dec 2021 11:20 PM IST (Updated: 12 Dec 2021 11:20 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி அருகே லாரி அதிபர் கொலை வழக்கில் பெங்களூருவுக்கு தப்ப முயன்ற தம்பதியை ஓசூரில் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே லாரி அதிபர் கொலை வழக்கில் பெங்களூருவுக்கு தப்ப முயன்ற தம்பதியை ஓசூரில் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

லாரி அதிபர் கொலை

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வன்னிய அடிகளார் நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 35), லாரிகளை வைத்து தொழில் நடத்தி வந்தார். இவர், சின்ன வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த லாரி மெக்கானிக் சங்கர் என்பவருக்கு ரூ.1 லட்சம் கடன் கொடுத்துள்ளார்.

நேற்று முன்தினம் சங்கர் வீட்டுக்கு சென்ற வெங்கடேசன் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதனால் ஆத்திரம் அடைந்த சங்கர் இரும்பு கம்பால் வெங்கடேசனை தாக்கியுள்ளார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தம்பதி கைது

இதனையடுத்து சங்கரும், அவரது மனைவி பாக்கியலட்சுமியும் தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் போில் வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய சங்கர் (35), அவரது மனைவி பாக்கியலட்சுமி (32) ஆகியோரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் பெங்களூருவுக்கு தப்பிச் செல்வதற்காக ஓசூர் பஸ் நிலையத்தில் காத்திருந்தபோது வாணியம்பாடி போலீசார் அவர்களை மடக்கி கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story