கத்தியால் கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை


கத்தியால் கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 12 Dec 2021 11:47 PM IST (Updated: 12 Dec 2021 11:47 PM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டையில் கத்தியால் கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டையில் கத்தியால் கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
கூலி தொழிலாளி தற்கொலை
முத்துப்பேட்டை கல்கேணித்தெரு காதர்முகைதீன் காலனியை சேர்ந்த அப்துல் ரஹ்மான் மகன் அகமது பைசல் (வயது 28). இவருக்கு திருமணம் ஆகவில்லை. தந்தை அப்துல் ரஹ்மான் குடும்பத்தை விட்டு பிரிந்து  சென்று விட்டார். அகமது பைசல் தனது தாய் ஹலீமாபானுவுடன் வசித்து வந்தார். கூலி வேலை செய்து வந்த இவருக்கு சரியாக வேலை இல்லாததால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அவரது தாய் தடுத்து விட்டார். இதையடுத்து உறவினரை அழைத்து வர அவரது தாய் சென்று விட்டார். அந்த நேரத்தில் வீட்டில் இருந்த அகமது பைசல் நேற்று காலை மீன் வெட்டும் கத்தியால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பெருகவாழ்ந்தான் சிவபிரகாசம் மற்றும் போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் தற்கொலை செய்து கொண்ட அகமது பைசல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story