இளையான்குடி,
இளையான்குடியில் நேற்று முன்தினம் காய்கறி சந்தை நடைபெற்றது. காய்கறி சந்தைக்கு வந்த 70 வயதான மூதாட்டி திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிேசாதித்த டாக்டர்கள், ஏற்கனவே அந்த மூதாட்டி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து இளையான்குடி போலீசார் நடத்திய விசாரணையில், தெற்கு கீரனூர் கிராமத்தை சேர்ந்த அமிர்தம் என்பவரின் மனைவி அருளாயி (வயது 70) என ெதரிய வந்தது. இதையடுத்து அவரது உடலை உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.