நெல்லையில் பரவலாக மழை
தினத்தந்தி 13 Dec 2021 12:31 AM IST (Updated: 13 Dec 2021 12:31 AM IST)
Text Sizeநெல்லையில் பரவலாக மழை பெய்தது.
நெல்லை:
நெல்லை மாநகர பகுதியான நெல்லை சந்திப்பு, டவுன், தச்சநல்லூர், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம் 2 மணி வரை வெயில் அடித்தது. தொடர்ந்து மாலை 3 மணிக்கு வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.
பின்னர் சிறிது நேரத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகள் சேறும் சகதியுமாக காணப்பட்டது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது.
இதேபோல் நெல்லை பேட்டை, கல்லூர், சேரன்மாதேவி பகுதியிலும் மழை பெய்தது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire