பெரியகுளம் கண்மாயை சுற்றி தடுப்பு வேலி அமைக்க வேண்டும்


பெரியகுளம் கண்மாயை சுற்றி தடுப்பு வேலி அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 13 Dec 2021 12:39 AM IST (Updated: 13 Dec 2021 12:39 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி பெரியகுளம் கண்மாயில் தடுப்பு வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி, 
சிவகாசி பெரியகுளம் கண்மாயில் தடுப்பு வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
பெரியகுளம்
சிவகாசி மாநகரின் மையப்பகுதியில் பெரியகுளம் கண்மாய் உள்ளது. சுமார் 24 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது கண்மாய் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. 
இந்த கண்மாயின் மத்தியில் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7500 சதுரஅடியில் மியாவாக்கி காடு அமைக்கப்பட்டது. இதில் தற்போது 2 ஆயிரத்துக்கும் அதிகமான மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
சிவகாசி நகரின் நிலத்தடி நீர்மட்டம் குறைய காரணம் பெரிய குளம் கண்மாய் நிரம்பாமல் இருந்தது தான். தற்போது கண்மாய் நிரம்பி உள்ளதால் ஒரு ஆண்டுக்கு தண்ணீர் பிரச்சினை இருக்காது. 
தடுப்பு வேலி 
நீர்வரத்து பாதைகள் தூர் வாரிய பின்னர் தான் கண்மாய்க்கு தண்ணீர் வந்துள்ளது. எனவே இனி வரும் காலங்களில் இந்த நீர்வரத்து பாதைகளில் அடைப்பு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 
அதே போல் கண்மாயை சுற்றி தடுப்பு வேலி அமைக்க வேண்டும். அப்போது தான் குப்பைகள், கழிவு பொருட்கள் கண்மாய்க்குள் வீசப்படாமல் இருக்கும். கண்மாயில் தண்ணீர் இல்லாதபோது திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தப்பட்டது. இனி அப்படி ஒரு நிலை ஏற்படாமல் இருக்க கண்மாயை சுற்றி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தடுப்பு வேலி அமைக்க வேண்டும். அல்லது தனியார் பங்களிப்புடன் இந்த வேலியை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு அவர்கள் கூறினார்.

Next Story