போக்குவரத்து நெரிசலை சரி செய்ய கூடுதல் போலீசார் நியமனம்
அருப்புக்கோட்டையில் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய கூடுதல் போலீசார் நியமனம் செய்யப்படும் என போலீஸ் சூப்பிரண்டு மனோகர் கூறினார்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய கூடுதல் போலீசார் நியமனம் செய்யப்படும் என போலீஸ் சூப்பிரண்டு மனோகர் கூறினார்.
வாகனங்கள் பறிமுதல்
தமிழகத்தில் விபத்து மற்றும் விதிமீறல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார். அதன்படி அருப்புக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் நேற்று நகர் மற்றும் தாலுகா பகுதியில் விபத்து மற்றும் விதிமீறல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் கலந்துகொண்டு வாகனங்களை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தார். அப்போது 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கூடுதல் போலீசார்
அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அருப்புக்கோட்டையில் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவுக்கு கூடுதல் போலீசார் நியமனம் செய்யப்படும். குற்றங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாரடைப்பால் உயிரிழந்த டவுன் போலீஸ் தலைமை போலீஸ் கனநாதன் குடும்பத்திற்கு நிவாரணத் தொகையும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் வழங்கினார்.
அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு சகாயஜோஸ், இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், பார்த்திபன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story