வெண்ணைமலை பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் படி பூஜை
வெண்ணைமலை பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் நேற்று படி பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கரூர்,
படி பூஜை
கரூர் வெண்ணைமலையில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று 47-ம் ஆண்டு திருப்புகழ் படி பூஜை விழா நடைபெற்றது. இதையொட்டி காலை 8 மணியளவில் விநாயகர் வழிபாடு செய்யப்பட்டு, தொடர்ந்து கோவில் மலையை சுற்றி பால், தீர்த்த காவடி எடுத்து திரளான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் வந்தனர்.
இதனைத்தொடர்ந்து படி பூஜை நடைபெற்றது. திருப்புகழ் மற்றும் தேவாரம் பாடி முதல் படியில் வேல் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்து தீபாராதனை காட்டப்பட்டது. ஒவ்வொரு படியிலும், வாழை இலையில் தேங்காய், பழங்கள், பூக்கள், வெற்றிலை வைத்து தீபாராதனை செய்யப்பட்டது.
சாமி தரிசனம்
இதனைத்தொடர்ந்து பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால், பன்னீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில் கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story