நெல் மூட்டைகளை ஏற்றிவந்த லாரி ஊருணியில் கவிழ்ந்தது


நெல் மூட்டைகளை ஏற்றிவந்த லாரி ஊருணியில் கவிழ்ந்தது
x
தினத்தந்தி 13 Dec 2021 12:44 AM IST (Updated: 13 Dec 2021 12:44 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அருகே நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி ஊருணியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் பொடியனூரில் இருந்து ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்திற்கு 320 நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரியை மதுரை மாவட்டம் ஆரியப்பட்டி, வைகை நகரை சேர்ந்த மகேஷ் கண்ணன் (வயது 34) என்பவர் ஓட்டிச் சென்றார்.

ஆவுடையானூர் ஊருணி கரையில் வடபகுதியில் உள்ள தார் சாலை வழியாக வந்தபோது, ஊருணி கரையின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் லாரி ஊருணிக்குள் பாய்ந்து கவிழ்ந்தது. இதனால் நெல் மூட்டைகள் மற்றும் லாரி தண்ணீரில் மூழ்கியது. டிரைவர் மகேஷ் கண்ணன் மற்றும் லாரியில் வந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் 4 பேர் காயமின்றி உயிர் தப்பினர். இருப்பினும் லாரியில் இருந்த ரூ.4½ லட்சம் மதிப்பிலான நெல் மூட்டைகள் தண்ணீரில் மூழ்கியது. இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story