மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; 2 பேர் படுகாயம்


மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 12 Dec 2021 7:16 PM GMT (Updated: 2021-12-13T00:46:44+05:30)

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

குளித்தலை, 
குளித்தலை அருகே உள்ள வயலூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 28). இவர் தனது மாமனாரான குளித்தலை அருகே உள்ள பாப்பக்காப்பட்டி பகுதியை சேர்ந்த முருகேசன் (45) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இனுங்கூர்- வளையப்பட்டி சாலையில் சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேராக மோதியது.
இந்த விபத்தில் காயமடைந்த சங்கர், முருகேசனை  அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் முருகேசன் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story