தங்க நகையை நூதன முறையில் திருட முயன்ற வடமாநில வாலிபர் கைது


தங்க நகையை நூதன முறையில்  திருட முயன்ற வடமாநில வாலிபர் கைது
x
தினத்தந்தி 13 Dec 2021 12:48 AM IST (Updated: 13 Dec 2021 12:48 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் தங்க நகையை நூதன முறையில் திருட முயன்ற வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் பாரதியார் 4-வது தெருவை சேர்ந்தவர் பழனி மகன் ராமலிங்கம் (வயது 40). இவரிடம், பீகார் மாநிலம் ஜாடியா பகுதியை சேர்ந்த அமீத்குமார் (30) என்பவர் தங்க நகைகளுக்கு பாலீஷ் போடுவதாக கூறினார். இதனை உண்மை என நம்பிய ராமலிங்கம், 27 கிராம் எடையுள்ள தங்க நகைகளை எடுத்து அமீத்குமாரிடம் கொடுத்து பேசிக் கொண்டிருந்தார். 

பின்னர் ராமலிங்கம் தனது வீட்டின் உள்ளே சென்று பார்த்து வந்தபோது, அந்த நகைகளை திருடிக் கொண்டு அமீத்குமார் தப்ப முயன்றார். இதனையடுத்து ராமலிங்கம் தனது உறவினர்கள் உதவியுடன் அமீத்குமாரை பிடித்து சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அமீத்குமாரை கைது செய்தனர்.

Next Story