தினத்தந்தி புகார் பெட்டி


அரியலூர்
x
அரியலூர்
தினத்தந்தி 13 Dec 2021 12:51 AM IST (Updated: 13 Dec 2021 12:51 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குடிநீர் இன்றி பொதுமக்கள் தவிப்பு 
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 40 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் குடிப்பதற்கும், தங்களின் அன்றாடத் தேவைகளுக்கும் தண்ணீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து குன்னம் வழியாக பெரம்பலூருக்கு குடிநீர் செல்கிறது.  ஆனால் இப்பகுதியில் குடிநீர் வசதியின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், குன்னம், பெரம்பலூர்.

தேங்கி நிற்கும் கழிவுநீர்
அரியலூர் கீழத்தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லாததால் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் பன்றிகளின் நடமாட்டமும் அதிகமாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், அரியலூர். 

சாலையோரத்தில் இருந்த மரங்கள் அகற்றம் 
கரூர் மாவட்டம், புன்செய் புகளூர் பேரூராட்சி புகழிமலை பின்புறம் கந்தம்பாளையம் செல்லும் சாலை நெடுகிலும்  மரங்கள் இருந்தன. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து சாலையோரத்தில் இருந்த அனைத்து மரங்களையும் வெட்டி எடுத்துச் சென்றுவிட்டனர். தமிழக அரசு மரக்கன்றுகளை நட்டு மரங்களை வளர்க்கும் நிலையில் மரங்களை வெட்டி எடுத்துச்சென்றது மிகுந்த வேதனையை அளிக்கிறது.  எனவே இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கனகராஜ், புன்செய்புகளூர், கரூர். 

நோய் பரவும் அபாயம் 
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், கிழுமத்தூர்-ஓலைப்பாடி சாலையில் கால் பகுதி மட்டும் தார் சாலையாகவும், மீதி மண்சாலையாகவும் உள்ளது. இங்கு 50 குடியிருப்புக்கள் உள்ளது. இச்சாலை குப்பை மேடாகவும், திறந்த வெளிகழிப்பிடமாகவும் உள்ளதால் சுகாதார சீர்கேடு உள்ளதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சேகர், கிழுமத்தூர், பெரம்பலூர். 

மாடுகளால் ஏற்படும் விபத்து 
புதுக்கோட்டை மாவட்டம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல் முள்ளூர் வரை தேசிய நெடுஞ்சாலையில் மாடுகள் பகல் நேரங்களிலும், இரவு நேரங்களிலும் படுத்து  உறங்குகிறது. இதனால் ஆம்புலன்ஸ் செல்வதற்கு இடையூறாக இருப்பதுடன் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சுரேஷ், முள்ளூர், புக்கோட்டை. 

வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா? 
கரூர் ராயனூர் கொங்கு அவென்யூ பகுதியில் தற்போது பெய்த மழையால், மழைநீர் செல்ல வழியில்லாமல் வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்புள்ளது. மேலும் தேங்கிய நீரில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. எனவே தேங்கிய நீரை வெளியேற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
ரம்யா, ராயனூர், கரூர். 

பயன்பாட்டிற்கு வராத நூலகம், அங்கன்வாடி 
புதுக்கோட்டை மாவட்டம், குமாரமங்கலம் ஊராட்சி பகுதியில் உள்ள ராமசாமி நகர், சக்தி நகர், அபிராமி நகர் குடியிருப்பு  பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் மத்திய, மாநில அரசு திட்டத்தில் நூலகம், அங்கன்வாடி புதிதாக கட்டப்பட்டு சுமார் 10 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
காசிராஜன், குமாரமங்கலம், புதுக்கோட்டை. 

குடிநீர் குழாயில் உடைப்பு 
திருச்சி மாவட்டம் பொன்மலைப்பட்டி 36வது வார்டு இந்தியன் வங்கி அருகில்  சாலையின் அடியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் குழாய் உடைப்பில் இருந்து வெளியேறும் நீரானது சாலையில் தேங்கி நிற்பதினால் சாலை பழுதடைந்து பள்ளமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் பள்ளத்தில் மோட்டார் சைக்கிளை விட்டு கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பொன்மலைப்பட்டி, திருச்சி.

சாலையில் செல்லும் கழிவுநீர்
திருச்சி 54-வது வார்டுக்கு உட்பட்ட ராமலிங்க நகர் 2-வது பிரதான சாலையில் கழிவுநீர் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் ஓடுகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் சாலையில் கழிவுநீர் செல்வதினால் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கேட்டுக்கொள்கிறோம். 
ஆனந்தன், திருச்சி.

குப்பைகளால் சுகாதார சீர்கேடு 
திருச்சி மாநகராட்சி 60-வது வார்டு அரவனூரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பொது கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிப்பறையின் அருகில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
 பொதுமக்கள், அரவனூர், திருச்சி. 

தேங்கி நிற்கும் பிளாஸ்டிக் கழிவுகள்
திருச்சி பழைய குட்ஷெட் ரோடு டாக்டர்  அம்பேத்கர் நகர் பகுதியில் செல்லும் கழிவுநீர் வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் தேங்கி நிற்கின்றன. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இவற்றில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், டாக்டர்  அம்பேத்கர் நகர், திருச்சி. 

தெருநாய்களால் தொல்லை
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வீரேஷ்வரம் கீழத்தெருவில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை இப்பகுதியில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்துகின்றன. மேலும் இவை சாலையின் குறுக்கே திடீரென ஓடுவதினால் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகின்றன. இதனால் பெண்கள், குழந்தைகள் சாலையில் நடந்து செல்ல பெரிதும் அச்சப்படுகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், ஸ்ரீரங்கம், திருச்சி. 

குண்டும், குழியுமான சாலை 
திருச்சி மேலப்புதூர் கான்வென்ட் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், மேலப்புதூர், திருச்சி. 


Next Story