தென் மண்டல அளவிலான ஆக்கி போட்டி
பள்ளி மாணவர்களுக்கு தென் மண்டல அளவிலான ஆக்கி போட்டி நடைபெற்றது.
விருதுநகர்,
விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் விருதுநகர் லயன்ஸ் கிளப் ஆப் டான் சார்பில் தென் மண்டல அளவில் பள்ளி மாணவர்களுக்கான ஆக்கி போட்டிகள் நடைபெற்றது. இதில் விருதுநகர், மதுரை, தேனி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 11 பள்ளி அணிகள் பங்கேற்றன. இதன் இறுதிப்போட்டியில் மதுரை திருநகர் இந்திராகாந்தி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது. 2-வது பரிசினை அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு லயன்ஸ் கிளப் ஆப் டான் தலைவர் சாரதி தலைமை தாங்கினார். வெற்றி பெற்ற அணிகளுக்கு பள்ளி செயலாளர் என்ஜினீயர் ராஜா, தலைமையாசிரியர் சந்திரமோகன், பள்ளி நிர்வாகிகள், லயன்ஸ் கிளப் ஆப் டான் நிர்வாகிகள் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை பள்ளி உடற்கல்வி இயக்குனர் ரமேஷ் செய்திருந்தார்.
Related Tags :
Next Story