கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு


கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு
x
தினத்தந்தி 13 Dec 2021 1:39 AM IST (Updated: 13 Dec 2021 1:39 AM IST)
t-max-icont-min-icon

கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நல்லாம்பாளையம் கிராமத்தின் ஏரிக்கரையில் பிரசித்தி பெற்ற கருப்புசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலை உஞ்சினி கிராம மக்கள் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் குல தெய்வமாக வழிபடுகின்றனர். கடந்த சில மாதங்களாக கோவில் நிர்வாகிகள் பொதுமக்களிடம் காணிக்கை பெற்று கோவிலை சீரமைத்து வருகின்றனர். தற்போது இந்த கோவிலில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த கோவில் பூட்டை உடைத்த மர்மநபர்கள் அங்குள்ள உண்டியலில் இருந்த பணத்தை திருடியுள்ளனர். மேலும் கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் எடுத்து சென்றனர். இதுகுறித்து கோவிலின் பூசாரி கொடுத்த புகாரின்பேரில் இரும்புலிக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்த கோவிலிலேயே துணிகர திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்கள், நவீன முறையில் கேமராவின் பதிவுகளையும் எடுத்துச்சென்றது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story