அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் ஏற்பாடுகள்: சேலம் புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து சேலம் புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
ஓமலூர்:
சேலம் புறநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட அ.தி.மு.க. அமைப்பு ரீதியான கிளை நிர்வாகிகள், பேரூராட்சி வார்டு கழக நிர்வாகிகள், மற்றும் நகர் வார்டு கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான உள்கட்சி அமைப்பு தேர்தல் இன்று(திங்கட்கிழமை) மற்றும் நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இந்த தேர்தல் அந்தந்த ஒன்றியம் மற்றும் நகர பேரூர் பகுதியில் உள்ள திருமண மண்டபம், சமுதாய கூடங்களில் நடக்கிறது. இந்த நிலையில் இந்த தேர்தலுக்கான பணிகளையும், முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக புறநகர் மாவட்டத்தில் உள்ள ஒன்றிய நகர, பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் தேர்தல் படிவங்களை தேர்தல் அலுவலரிடம் வழங்கும் நிகழ்ச்சி ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். தொடர்ந்து தேர்தல் படிவங்களை தேர்தல் அலுவலரிடம் வழங்கினார்.
இதில், கட்சியின் அமைப்பு செயலாளர் செம்மலை, மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், எம்.எல்.ஏ.க்கள் மணி (ஓமலூர்), ராஜ முத்து (வீரபாண்டி), சித்ரா (ஏற்காடு), நல்லதம்பி (கெங்கவல்லி), ஜெய்சங்கர் (ஆத்தூர்), ஓமலூர் ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், அசோகன், கோவிந்தராஜ், காடையாம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் சேரன் செங்குட்டுவன், சுப்பிரமணியம் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
===
Related Tags :
Next Story