மாரிதாஸ் கைதை கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு பா.ஜனதாவினர் சேலத்தில் ஆர்ப்பாட்டம்


மாரிதாஸ் கைதை கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு பா.ஜனதாவினர் சேலத்தில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Dec 2021 3:51 AM IST (Updated: 13 Dec 2021 3:51 AM IST)
t-max-icont-min-icon

யூ டியூபர் மாரிதாஸ் கைதை கண்டித்து சேலத்தில் பா.ஜனதா கட்சியினர் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம்:
யூ டியூபர் மாரிதாஸ் கைதை கண்டித்து சேலத்தில் பா.ஜனதா கட்சியினர் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கருப்பு துணி கட்டி போராட்டம்
தமிழக அரசை விமர்சித்து மதுரையை சேர்ந்த யூ டியூபர் மாரிதாஸ் என்பவர் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து சேலம் மாவட்ட பா.ஜனதா கட்சியின் தகவல் தொழில் நுட்ப பிரிவு சார்பில் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மரவனேரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் நந்தகோபால் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் நரேந்திரன் முன்னிலை வகித்தார்.
விடுதலை செய்ய வேண்டும்
மாநகர் மாவட்ட தலைவர் அண்ணாதுரை, பொதுச்செயலாளர் சசிக்குமார், துணை தலைவர் பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினர். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும் போது,‘கருத்து சுதந்திரம் பற்றி பேசியதற்காக மாரிதாஸ் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரை கைது செய்ததை கண்டிக்கிறோம். மேலும் அவரை விரைவில் விடுதலை செய்ய வேண்டும்’ என்றார்கள். 

Next Story