பெசன்ட்நகர் கடற்கரையில் 28 டன் குப்பைகள் அகற்றம்


பெசன்ட்நகர் கடற்கரையில் 28 டன் குப்பைகள் அகற்றம்
x
தினத்தந்தி 13 Dec 2021 5:26 AM IST (Updated: 13 Dec 2021 5:26 AM IST)
t-max-icont-min-icon

மாணவர்கள், தன்னார்வலர்கள் மூலம் பெசன்ட்நகர் கடற்கரையில் 28 டன் குப்பைகள் அகற்றம் ககன்தீப் சிங் பேடி பாராட்டு.

சென்னை,

சென்னையில் சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக கடற்கரை பகுதிகளில் அதிக அளவில் செருப்பு, பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் கரை ஒதுங்கியது. பெருநகர சென்னை மாநகராட்சி, தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் பெசன்ட்நகர் கடற்கரையை சுத்தம் செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி இதுவரை 270 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.

இந்தநிலையில் நேற்று பெசன்ட்நகர் கடற்கரையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு, தனியார் துறை ஊழியர்கள் மற்றும் பல்வேறு குடியிருப்போர் நலச்சங்கங்களுடன் இணைந்து கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதில் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இவர்கள் மூலம் கடற்கரையில் கிடந்த 28 டன் குப்பைகள் அகற்றப்பட்டது.

இதனை ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, கடற்கரையில் அதிக அளவில் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்த மாணவர்களை பாராட்டி, சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை கமிஷனர்கள் டாக்டர் எஸ்.மனிஷ், சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story