மகன்-மருமகள் கவனிக்காததால், கணவன் இறந்த நாளில் கடலில் குதித்து மனைவி தற்கொலை முயற்சி


மகன்-மருமகள் கவனிக்காததால், கணவன் இறந்த நாளில் கடலில் குதித்து மனைவி தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 13 Dec 2021 2:23 PM IST (Updated: 13 Dec 2021 2:23 PM IST)
t-max-icont-min-icon

மகன் மற்றும் மருமகள் சரிவர கவனிக்காமல் விட்டதால், மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், தனது கணவர் இறந்த நாளில் கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்ள வந்ததாகவும் போலீசாரிடம் அவர் தெரிவித்தார்.

சென்னை பெசன்ட் நகர் கவர்னர் விருந்தினர் இல்லம் பின்புறம் உள்ள கடலில் நேற்று மூதாட்டி ஒருவர் கடலில் இறங்கி தற்கொலை செய்ய முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ராஜா (வயது 47) ஓடிச்சென்று மூதாட்டியை காப்பாற்றி சாஸ்திரி நகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தார்.

விசாரணையில் தற்கொலைக்கு முயன்றவர் புரசைவாக்கம், சாலைமா நகரை சேர்ந்த மகேஸ்வரி (59) என்பதும், தனது மகன் மற்றும் மருமகள் சரிவர கவனிக்காமல் விட்டதால், மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், தனது கணவர் சந்திரன் இறந்த நாளான இன்று (நேற்று) கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்ள வந்ததாகவும் போலீசாரிடம் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் அவரது மகனை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து, அறிவுரை வழங்கி தாயாரை அவருடன் அனுப்பி வைத்தனர்.


Next Story