தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விசைத்தறி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்


தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விசைத்தறி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்
x
தினத்தந்தி 13 Dec 2021 7:57 PM IST (Updated: 13 Dec 2021 7:57 PM IST)
t-max-icont-min-icon

தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விசைத்தறி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்

பல்லடம், 
பல்லடம் அருகே முன் விரோதத்தில் கட்டையால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விசைத்தறி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதைத் தொடர்ந்து கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
 விசைத்தறி தொழிலாளி
பல்லடம் அருகே உள்ள சேடபாளையத்தை சேர்ந்தவர் முருகசாமி மகன் பாலசுப்பிரமணி (வயது 47), விசைத்தறி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி மகன் சுந்தரமூர்த்தி (38) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் சேடபாளையம் பஸ் நிறுத்தத்தில் வைத்து பாலசுப்பிரமணி, சுந்தரமூர்த்திக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த சுந்தரமூர்த்தி அருகில் கிடந்த கட்டையை எடுத்து பாலசுப்பிரமணியின் தலையில் கடுமையாக தாக்கினார். 
பரிதாப சாவு
இதில் பலத்த காயமடைந்த பாலசுப்பிரமணி மயங்கி விழுந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 
அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பல்லடம் போலீசார் சுந்தரமூர்த்தியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 
இந்த நிலையில் பாலசுப்பிரமணி சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story