தேவாலா தங்க சுரங்க பகுதியில்வனத்துறையினர் கண்காணிப்பு


தேவாலா தங்க சுரங்க பகுதியில்வனத்துறையினர் கண்காணிப்பு
x
தினத்தந்தி 13 Dec 2021 9:12 PM IST (Updated: 13 Dec 2021 9:12 PM IST)
t-max-icont-min-icon

தேவாலா தங்க சுரங்க பகுதியில்வனத்துறையினர் கண்காணிப்பு

கூடலூர்

தேவாலா தங்க சுரங்க பகுதியில் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதா என துப்பாக்கிகளுடன் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

தங்க சுரங்க வனம்

கூடலூர் தாலுகா தேவாலா, நாடுகாணி, பந்தலூர், சேரம்பாடி பகுதியில் ஆங்கிலேயர் கால தங்க சுரங்க வனம் உள்ளது. இங்கு தங்கம் தோண்டி எடுப்பதால் கூடுதல் செலவு ஆகிறது என ஆங்கிலேயரால் சுரங்கம் தோண்டும் திட்டம் கைவிடப்பட்டது. தற்போது வனத்துறையின் கட்டுப்பாட்டில் இப்பகுதி உள்ளது. 

அடர்ந்த வனம் என்பதால் அங்கு காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்த நிலையில் வனப்பகுதிக்குள் அத்துமீறி பல இடங்களில் தோண்டி தங்கத் துகள்களை சில ஆசாமிகள் சேகரித்து வருகின்றனர். இதன் காரணமாக ஆபத்தான பள்ளங்களில் வனவிலங்குகள் தவறி விழுந்து உயிரிழந்து வருகிறது. 

வனத்துறையினர் ரோந்து 

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காட்டு யானை உடல் ஆபத்தான பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டது. இதன் காரணமாக வனப்பகுதிக்குள் யாரும் நுழையக்கூடாது என்று வனத்துறையினர் உத்தரவிட்டதுடன், தேவாலா உள்பட தங்க சுரங்க வனப்பகுதியில் வனத்துறை சார்பில் எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டன. 

இந்த நிலையில் அங்கு தடையை மீறி சிலர் நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனச்சரக அதிகாரி ராம்குமார் தலைமையில் வனத்துயைினர் தேவாலா தங்க சுரங்க வனப்பகுதியில் துப்பாக்கிகளுடன் தீவிர ரோந்து செய்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு மர்மநபர்களின் நடமாட்டம் உள்ளதா? என்றும் கண்காணித்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

கடும் நடவடிக்கை 

தங்க சுரங்க வனப்பகுதியில் தடையை மீறி உள்ளே நுழைந்து தங்க துகள்களை சேகரிக்க பள்ளம் தோண்டுகிறார்கள். இதனால் அதில் வனவிலங்குகள் சிக்கி உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவேதான் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

தற்பேது கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ரோந்து சென்று கண்காணிக்கப்பட்டது. இனி தொடர்ந்து இதுபோன்று கண்காணிப்பு பணி நடக்கும். தடையை மீறி யாராவது உள்ளே சென்றால் அவர்கள் மீது வனபாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story