5 கிராம மக்கள் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்
5 கிராம மக்கள் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்
கூடலூர்
கூடலூர் அருகே அட்டகாசம் செய்து வரும் அரிசி ராஜா காட்டு யானையை பிடிக்கக்கோரி 5 கிராம மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.
காட்டு யானை அட்டகாசம்
கூடலூர் தாலுகா பாடந்தொரை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங் களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. குறிப்பாக குட்டிகளுடன் ஊருக்குள் வரும் காட்டு யானைகள் வீடுகளை உடைத்து அட்டகாசம் செய்து வருகிறது.
இதற்கிடையே இந்த பகுதியில் கிராமங்களில் குட்டி யானை ஒன்று அடிக் கடி ஊருக்குள் புகுந்து வீடுகளை உடைத்து அரிசியை எடுத்து தின்றும், சேதப்படுத்தியும் வருகிறது. எனவே இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த யானைக்கு அரிசி ராஜா என்று பெயரிட்டு உள்ளனர்.
தடுக்க முடியவில்லை
ஆனால் இந்த குட்டி யானையின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், அதை பிடித்து முதுமலை முகாமில் அடைக்க வேண்டும் என்று இந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மறியலிலும் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து கும்கி யானைகளை அழைத்து வந்து வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் காட்டு யானையின் அட்டகாசத்தை தடுக்க முடியவில்லை. அந்த யானை மேலும் சில யானைகளை ஊருக்குள் அழைத்து வந்துவிடுகிறது.
கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்
எனவே இந்த குட்டி யானையை உடனடியாக பிடிக்க வலியுறுத்தி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து கூடலூர் அருகே உள்ள செளுக்காடி, மூச்சிகண்டி, கர்க்கபாலி, சுண்ட வயல், புளியமன்சோலை ஆகிய 5 கிராம மக்கள் தங்களது வீடுகளில் நேற்று காலை முதல் மாலை வரை கருப்புக் கொடிகளை ஏற்றி போராட்டம் நடத்தினர்.
இதில் பெண்கள், குழந்தைகள், என அனைவரும் கலந்து கொண்டு தங்களது வீடுகளில் நின்று கருப்பு கொடிகளை கையில் ஏந்தியவாறு வனத் துறையின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோஷங்களை எழுப்பினர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-
பிடிக்க வேண்டும்
பல வாரங்களாக அரிசி ராஜா உள்ளிட்ட காட்டு யானைகள் வீடுகளை உடைத்து வருகிறது. அதற்கான இழப்பீட்டுத் தொகையையும் வனத்துறை யினர் வழங்குவதில்லை. இந்த காட்டு யானைகள் ஊருக்குள் வருவதற்கு அரிசிராஜா குட்டியானைதான் காரணம். எனவே அதை பிடிக்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வில்லை.
இந்த யானைகள் தொடர்ந்து வீடுகளை சேதப்படுத்தி வருவதால், அதிகளவில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. எனவே உடனடியாக காட்டு யானையை பிடிக்க வேண்டும். இல்லை என்றால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story