விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Dec 2021 9:25 PM IST (Updated: 13 Dec 2021 9:25 PM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேதாரண்யம்:
வேதாரண்யம் பஸ்நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் குமார் தலைமை தாங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தியில் கடந்த 6-ந்தேதி அம்பேத்கரின் நினைவு தின நிகழ்ச்சியின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கற்களை வீசி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும்  ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். அப்போது அங்கிருந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை கைது செய்து அந்த பகுதியில் இருந்த ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Next Story