பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ்
பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ்
உடுமலை,
உடுமலை உழவர் சந்தைக்குஎதிரே அன்சாரி வீதியில் உள்ள முழு நேர கிளை நூலகம் எண் 2-ல் நூலக வார விழா மற்றும் மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழாவையொட்டி பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கு ஓவியம், கவிதை மற்றும் கட்டுரைப்போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு புத்தகங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நூலகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு நூலகர் வீ.கணேசன் தலைமை தாங்கினார். உடுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு புத்தகங்கள் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி பேசினார்.
விழாவில் உடுமலை பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் விஜயலட்சுமி, கோட்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கலாமணி உள்பட பலர் வாழ்த்தி பேசினர். முன்னதாக ஹெலிகாப்டர் விபத்தில் வீரமரணம் அடைந்த ராணுவ தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.நிகழ்ச்சிகளை உடுமலை பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் வே.சின்னராசு தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை நூலகர்கள் மகேந்திரன், பிமோத், அஷ்ரப், சித்திகா மற்றும் நூலக வாசகர் வட்டத்தினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story