விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி


விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
x
தினத்தந்தி 13 Dec 2021 9:38 PM IST (Updated: 13 Dec 2021 9:38 PM IST)
t-max-icont-min-icon

விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

முத்தூர், 
முத்தூர் அருகே உள்ள சக்கரபாளையம் கிராமத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை அழகு மாணிக்கம் கலைக்குழுவினர் கலந்துகொண்டு சக்கரபாளையம் பஸ் நிறுத்தம், அரசு பள்ளி வளாகம், பிள்ளையார் கோவில் தோட்டம் ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை மூலம் அறிமுகப்படுத்திய ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தின் பலன்கள், நன்மைகள் குறித்து கலை நிகழ்ச்சி நடத்தனர். அப்போது அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஒத்துழைப்புடன் மாணவர்களின் வீட்டுக்கு அருகிலேயே ஆசிரிய, ஆசிரியைகள் தன்னார்வலர்கள் உதவியுடன் மாலை நேர வகுப்புகள் நடத்தப்படும் வழிமுறைகள், ஆரம்ப கல்வி முதல் மேல்நிலைக்கல்வி வரை பாடங்கள் கற்பித்தல், செயல்முறை விளக்கத்துடன் கற்றல் திறன் மேம்படுத்துவதன் நன்மைகள் ஆகியவைகள் பற்றி ஆடல், பாடல், நாடகம், கரகாட்டம், பொம்மலாட்டம், தப்பாட்டம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலம் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் பற்றிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் மல்லிகா, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஸ்ரீதேவி மற்றும் ஆசிரிய- ஆசிரியைகள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story