ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக சீரமைக்கக்கோரி மயிலாடுதுறையில், ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை:
பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக சீரமைக்கக்கோரி மயிலாடுதுறையில், ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக சீரமைக்கக்கோரி ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர தலைவர் சர்புதீன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ,சி. நகர தலைவர் ஷாஜகான் முன்னிலை வகித்தார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் இடும்பையன் கலந்து கொண்டு பேசினார்.
மயிலாடுதுறை நகரில் அடிக்கடி பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதை போக்கிட முழுமையாக பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக சீரமைக்க வேண்டும்.
பாதாள சாக்கடை குழாய்கள்
நகரில் பல தெருக்களில் குவிந்துகிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்தி மேலாண்மை செய்ய வேண்டும். பாதாள சாக்கடை குழாய்கள் உள்வாங்கியதன் காரணமாகவும், மழையின் காரணமாகவும் சேதமடைந்துள்ள அனைத்து சாலைகளையும் உடனே சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட தலைவர் பொன்.குமரன், கட்சியின் நிர்வாகிகள் சேக்இஸ்மாயில், மனோன்ராஜ், இமானுவேல், ராஜமோகன், பத்மநாபன், பாலசுப்ரமணியன், சுந்தர்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் ராஜேஷ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story