வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது
5 மாநில சட்டமன்ற தேர்தலுக்காக வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது என்று மன்னார்குடியில் சீமான் கூறினார்.
மன்னார்குடி:
5 மாநில சட்டமன்ற தேர்தலுக்காக வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது என்று மன்னார்குடியில் சீமான் கூறினார்.
நிர்வாகிகள் கூட்டம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹூமாயூன்கபீர், மாவட்ட செயலாளர் வேதாபாலா, இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சர்வத்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மன்னார்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ராம.அரவிந்தன் வரவேற்றார். கூட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் மணி செந்தில், மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் தொகுதி செயலாளர் செந்தில் நன்றி கூறினார்.
பேட்டி
பின்னர் சீமான் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அ.தி.மு.க. என்ற கட்சி இருக்கிறதா? இயங்குகிறதா? என்றே தெரியவில்லை. அ.தி.மு.க. எதிர் கட்சிக்கான வேலையை செய்யவில்லை.
போலீஸ் நிலைய ரணம் குறித்த வழக்கில் தி.மு.க. இரட்டை நிலைப்பாடு எடுக்கிறது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஜெயராஜ், பெனிக்ஸ் மரணத்திற்கு நீதி கேட்ட தி.மு.க., தற்போது மாணவர் மணிகண்டன் மரணத்திற்கு நீதி கேட்டு போராடுபவர்களை அடக்குகிறது.
மக்களுக்கு பொதுவானவர்களாக
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் சசிகலா தான் அ.தி.மு.க.வை காப்பாற்றினார். நீதிபதிகள் மக்களுக்கு பொதுவானவர்களாக இருக்க வேண்டும். 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்காக வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. எதிர் கட்சியாக இருந்த போது கருத்து சுதந்திரம் குறித்து பேசிய தி.மு.க., தற்போது கருத்து சுதந்திரத்தின் குரல் வளையை நெரிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
---
Related Tags :
Next Story