வாணியம்பாடியில் 2 டன் ரேஷன் அரிசியுடன் கார் பறிமுதல்


வாணியம்பாடியில் 2 டன் ரேஷன் அரிசியுடன் கார் பறிமுதல்
x
தினத்தந்தி 13 Dec 2021 10:10 PM IST (Updated: 13 Dec 2021 10:10 PM IST)
t-max-icont-min-icon

2 டன் ரேஷன் அரிசியுடன் கார் பறிமுதல்

வாணியம்பாடி

வேலூர் குடிமைப் பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில், சிறப்பு அதிரடி குழுவினர் வாணியம்பாடி- பைபாஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது வாணியம்பாடியில் இருந்து ஆந்திர மாநிலம் குப்பத்திற்கு காரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், பறக்கும் படை போலீசார் பைபாஸ் ரோட்டில்  சந்தேகத்திற்கிடமாக அதிவேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது காரில் 50 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மொத்த எடை 2 டன் ஆகும். இது தொடர்பாக ரேஷன் அரிசியை கடத்தி வந்த மாதனூரை சேர்ந்த தேவேந்திரன் (வயது 33) என்பவனை கைது செய்து, 2 டன் ரேஷன் அரிசி, காரை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story