பள்ளிக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க கலெக்டர் உத்தரவு


பள்ளிக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 13 Dec 2021 10:11 PM IST (Updated: 13 Dec 2021 10:11 PM IST)
t-max-icont-min-icon

குறைதீர்வு கூட்டத்தில் மாணவி கோரிக்கை மனு கொடுத்த அன்றே பள்ளியில் ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.

வாணியம்பாடி

குறைதீர்வு கூட்டத்தில் மாணவி கோரிக்கை மனு கொடுத்த அன்றே பள்ளியில் ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.

மாணவி கோரிக்கை மனு

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில்  வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம் பூங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவி ஒருவர் தங்கள் பள்ளிக்கு ஆசிரியர் வேண்டி மனு அளித்தார். 

கலெக்டர் உத்தரவு

அதைத்தொடர்ந்து கலெக்டர் அமர் குஷ்வாஹா, நேற்று மாலை பூங்குளம் பள்ளிக்குச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, சாலை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் விரைவில் செய்து தரப்படும் என தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது திருப்பத்தூர் சப்-கலெக்டர் (பொறுப்பு) பானு, மாவட்ட கல்வி அலுவலர் தேவபிரகாஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாவதி, வட்டார கல்வி அலுவலர் நெடுஞ்செழியன், பள்ளி தலைமையாசிரியர் அம்பிகா, ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலி தினகரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story