கிருஷ்ணகிரியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்


கிருஷ்ணகிரியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
x
தினத்தந்தி 13 Dec 2021 10:30 PM IST (Updated: 13 Dec 2021 10:30 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கினார். அவர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 17 முஸ்லிம் மகளிர் உதவும் சங்க உறுப்பினர்களுக்கு காய்கறி வியாபாரம் செய்ய தலா ரூ.20 ஆயிரம் மதிப்பிலான தள்ளு வண்டிகளை வழங்கினார். மேலும் தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர் நேரு ஆகியோர் பிறந்த நாளையொட்டி கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலை கல்லூரியில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற 16 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ.48 ஆயிரம் பரிசுத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகன், தனித்துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் அமீர்பாஷா, தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் பவானி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story