கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணத்தில் அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல்
கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணத்தில் அ.தி.மு.க. உள்கட்சி தேர்தலையொட்டி விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
காவேரிப்பட்டணம்:
உள்கட்சி தேர்தல்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள 12 ஒன்றியங்கள், ஒரு நகராட்சி 2 பேரூராட்சிக்கு உட்பட்ட 2,500 அ.தி.மு.க. கிளை நிர்வாகிகள், 33 நகராட்சி வார்டு நிர்வாகிகள், 30 பேரூராட்சி வார்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்த நிர்வாகிகள் தேர்தல் நேற்று தொடங்கியது. இன்றும் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
நேற்றைய நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரியில் நிர்வாகிகளிடம், விருப்ப மனுக்களை வேலூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வேலழகன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் முரளி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், நகர செயலாளர் கேசவன், முன்னாள் நகர்மன்ற தலைவர் தங்கமுத்து, முன்னாள் ஆவின் தலைவர் தென்னரசு மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
காவேரிப்பட்டணம் கிழக்கு ஒன்றியம், பர்கூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட கிளை மற்றும் நகர பொறுப்புகளுக்கான அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் நேற்று வேலம்பட்டியில் நடந்தது. ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், நகர செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் தேர்தல் நடத்தும் பொறுப்பாளர்களான, வேலூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜன், வேலூர் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சூலை ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு விருப்ப மனுக்களை பெற்றனர்.
22 ஊராட்சிகள், நாகோஜனஅள்ளி பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய முன்னாள் செயலாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காவேரிப்பட்டணம் நகரம்
காவேரிப்பட்டணம் மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட 14 ஊராட்சிகள், காவேரிப்பட்டணம் நகரத்திற்கு உட்பட்ட 15 வார்டுகளுக்கான அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் நடந்தது. இதற்கு ஒன்றிய செயலாளர் பையூர் பெ.ரவி, நகர செயலாளர் வாசுதேவன் ஆகியோர் தலைமை தாங்கினர். தேர்தல் நடத்தும் பொறுப்பாளர்களான, வேலூர் புறநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் மகேந்திரன், வேலூர் மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் கோவிந்தசாமி ஆகியோர் விருப்ப மனுக்களை பெற்றனர்.
இதில் வேளாண் விற்பனை கூட்டுறவு சங்க தலைவர் சுந்தரேசன், மாவட்ட பால்வள தலைவர் குப்புசாமி, பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார், ஒன்றிய பொருளாளர் பழனிசாமி, அவைத்தலைவர் சுந்தர், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story