பேரணாம்பட்டு பகுதியில் மீண்டும் நில அதிர்வு


பேரணாம்பட்டு பகுதியில் மீண்டும் நில அதிர்வு
x
தினத்தந்தி 13 Dec 2021 10:51 PM IST (Updated: 13 Dec 2021 10:51 PM IST)
t-max-icont-min-icon

பேரணாம்பட்டு பகுதியில் மீண்டும் நில அதிர்வு

பேரணாம்பட்டு

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள கமலாபுரம், சிந்தக் கணவாய், கவுராப்பேட்டை, டி.டி. மோட்டூர், பெரிய பள்ளம் ஆகிய 5 கிராமங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 12 மணி, அதிகாலை 3 மணி, 3.45 மணி ஆகிய நேரங்களில் 3 முறை திடீரென நில அதிர்வு பயங்கர சத்துத்துடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டிலிருந்த பாத்திரங்கள் உருண்டன. தூங்கிக்கொண்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியில் எழுந்து வீட்டிலிருந்து ஓடி வந்து குழந்தைகளுடன் தெருவில் விடிய விடிய காத்திருந்தனர்.

ஆனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. இது குறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு வருவாய் துறையினர் சென்று கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர். கடந்த 2-ந் தேதி இதே கிராமங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தற்போது மீண்டும் 2-வது முறையாக நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Next Story