கந்தம்பாளையம் அருகே பள்ளி மாணவி கடத்தல்; கட்டிட மேஸ்திரி போக்சோவில் கைது


கந்தம்பாளையம் அருகே பள்ளி மாணவி கடத்தல்; கட்டிட மேஸ்திரி போக்சோவில் கைது
x
தினத்தந்தி 13 Dec 2021 10:53 PM IST (Updated: 13 Dec 2021 10:53 PM IST)
t-max-icont-min-icon

கந்தம்பாளையம் அருகே பள்ளி மாணவி கடத்தல்; கட்டிட மேஸ்திரி போக்சோவில் கைது

கந்தம்பாளையம்:
கந்தம்பாளையம் அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. மாணவியை பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து பெற்றோர் தங்களது மகளை கண்டுபிடித்து தரக்கோரி நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் மாயமான மாணவியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் போலீசாரின் விசாரணையில், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள குஞ்சாண்டியூரை சேர்ந்த கட்டிட மேஸ்திரி மணிவாசகம் (வயது 25) என்பவர் கடந்த 1½ ஆண்டுகளாக கந்தம்பாளையம் பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். அப்போது மணிவாசகத்துக்கும், பிளஸ்-2 மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவியிடம் திருமண ஆசைவார்த்தை கூறிய அவர் மாணவியை கடத்தி சென்று திருப்பூரில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து நல்லூர் போலீசார் திருப்பூர் சென்று மாணவியை மீட்டதோடு, பள்ளி மாணவியை திருமண ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்ற மணிவாசகத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மாணவி காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

Next Story