2-ம் நிலை காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனை
2-ம் நிலை காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனை
வேலூர்
தமிழகத்தில் 2-ம் நிலை காவலர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வருகிற பிப்ரவரி மாதம் பயிற்சி தொடங்கப்பட உள்ளது. வேலூர் மாவட்டத்தில் உடற்தகுதி தேர்வில் வெற்றி பெற்ற 2-ம் நிலை காவலர்களின் கைரேகைகளை சேகரிக்கும் பணி கடந்த 8-ந்தேதி நடந்தது.
இந்தநிலையில் அவர்களுக்கான மருத்துவப் பரிசோதனை வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. அதில் கண், காது பிரிவு உள்ளிட்ட 5 டாக்டர்கள் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு பரிசோதனை செய்தனர். அதில் 186 பேர் கலந்து கொண்டனர். இந்த பரிசோதனை முடிவு வெளியானதும் தகுதி உடையவர்களுக்கு பயிற்சி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story