கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 2 பேர் கைது
அருமனை அருகே கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
குழித்துறை,
அருமனை அருகே கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கல்லூரி மாணவி
அருமனை அருகே உள்ள பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் பி.காம். மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். அந்த மாணவி ஓய்வு நேரத்தில் மாதச்சீட்டு நடத்தி வந்தார். அதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது.
இதனால், மாணவி பண நெருக்கடியில் சிக்கி தவித்து வந்தார். அப்போது, மேல்பாலை பகுதியை சேர்ந்த ராணுவ வீரரான சஜித் (வயது 30) என்பவர் அறிமுகமாகி பண உதவி செய்ய முன்வந்தார்.
பாலியல் பலாத்காரம்
அதைதொடர்ந்து அவர்கள் இருவரும் செல்போன் மூலம் அடிக்கடி பேசி வந்தனர். அப்போது, சஜித் மாணவியை ஆபாச படங்கள் எடுத்துள்ளார். பின்னர், அந்த படத்தை காட்டி மாணவியை சஜித் மிரட்டியுள்ளார். மேலும் அவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அது மட்டுமின்றி மாணவியின் ஆபாச படங்களை தனது நண்பர்களுக்கும் அனுப்பியுள்ளார். அவர்களும் மாணவியை தங்கள் ஆசைக்கும் இணங்குமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
2 வாலிபர்கள் கைது
அதை தொடர்ந்து அந்த மாணவி இதுபற்றி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சஜித் மற்றும் அவரது நண்பர்களான ஜான் பிரிட்டோ (32), மேல்பாலை பகுதியை சேர்ந்த ராணுவ வீரரான கிரீஷ் (32), லிவின் ஜாண் (32) ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்தநிலையில் தனிப்படை போலீசார், ஜான் பிரிட்டோ, லிபின் ஜாண் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், சஜித், கிரீஷ் ஆகிய இருவரும் ராணுவ வீரர்கள் என்பதால் அவர்களை கைது செய்ய தனியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story