மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூரில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 620 மனுக்கள் பெறப்பட்டன.
கரூர்
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி. பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் அவர்களின் கோரிக்கைகளை விரிவாக கேட்டறிந்த கலெக்டர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மக்களின் கோரிக்கைகள் குறித்து அதிகபட்சமாக ஒருவார காலத்திற்குள் நடவடிக்கை எடுத்து அதற்கான அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மாற்றுத்திறனாளிகள்
மேலும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ள மனுக்கள் மீது எவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுக்க இயலுமோ அவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
கோரிக்கை மனு அளிக்க வருகை தந்திருந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அவர்களின் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
620 மனுக்கள்
இக்கூட்டத்தில் 620 மனுக்கள் பெறப்பட்டன. இதில் சொந்த வீடு கேட்டு சரவணன் என்ற மாற்றுத்திறனாளி தனது மகள் தன்யா, மகன் தர்ஷனுடன் வாடகை வீட்டில் வசித்து வரும் நிலையில், கோரிக்கை மனு அளித்த 5 நிமிடத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டுள்ள குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையினை கலெக்டர் வழங்கினார்.
Related Tags :
Next Story