கேரளாவில் இருந்து குமரிக்கு வந்தவருக்கு கொரோனா
கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்துக்கு வந்தவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 6 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
நாகர்கோவில்,
கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்துக்கு வந்தவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 6 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை
குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. 18 வயதை தாண்டிய அனைவருக்கும் தடுப்பூசி போடுவதிலும் மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. முக்கியமாக சுகாதாரத்துறையினர் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள். தற்போது கடற்கரை கிராம மக்களை வீடு வீடாக சென்று சந்தித்து தடுப்பூசி செலுத்தும் பணி நடக்கிறது.
இந்த நிலையில் தற்போது ஒமைக்ரான் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை ேமற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் வருபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் நேற்று முன்தினம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியிலும், சோதனை சாவடிகளிலும், களப்பணியாளர்கள் மூலமாகவும் 1,759 பேருக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டது.
7 பேருக்கு தொற்று
இதில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதாவது நாகர்கோவிலில் 3 பேருக்கும், குருந்தன்கோடு, திருவட்டார், தோவாளையில் தலா ஒருவருக்கும், கேரளாவில் இருந்து வந்த ஒருவருக்கும் என மொத்தம் 7 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story