கன்னியாகுமரியில் சூறாவளி காற்றுடன் கடல் சீற்றம்
கன்னியாகுமரியில் சூறாவளி காற்றுடன் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால், விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 4 மணி நேரம் நிறுத்தப்பட்டது.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரியில் சூறாவளி காற்றுடன் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால், விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 4 மணி நேரம் நிறுத்தப்பட்டது.
சபரிமலை சீசன்
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அவர்கள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள். பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்துவிட்டு திரும்புவார்கள். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது சபரிமலை சீசன் என்பதால் நேற்று காலையில் ஏராளமான அய்யப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் கன்னியாகுமரிக்கு வந்திருந்தனர். காலை 8 மணிக்கு வழக்கம் போல் படகு போக்குவரத்து தொடங்கியது.
கடல் சீற்றம்
சிறிது நேரத்தில் கடலில் பலத்த சூறாவளி காற்று வீசத்தொடங்கியது. அத்துடன் கடல் சீற்றம் ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்து கரையை நோக்கி பாய்ந்து வந்தன. இதனால், காலை 9.30 மணிக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. படகு தளத்தில் காத்திருந்த சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.
பின்னர், 4 மணி நேரத்திற்கு பிறகு மதியம் 1.30 மணியளவில் காற்றின் வேகம் குறைந்தது. கடலும் இயல்பு நிலைக்கு திரும்பியது. அதன்பின்பு படகு போக்குவரத்து வழக்கம் போல் இயக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்றனர்.
Related Tags :
Next Story