நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்


நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Dec 2021 12:06 AM IST (Updated: 14 Dec 2021 12:06 AM IST)
t-max-icont-min-icon

கைத்தறிக்கு ஜி.எஸ்.டி. வரியை நீக்கக்கோரி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பரமக்குடி,

பரமக்குடி எமனேசுவரம் பகுதியில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் மற்றும் அதன் உப தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் பருத்தி மற்றும் பட்டு நூல்களின் விலை உயர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், தொடர்ந்து கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி துணி விற்பனைகளுக்கு முழுமையான தள்ளுபடி மானியம் வழங்க வேண்டும் என்றும், மத்திய, மாநில அரசுகளால் கைத்தறி ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனைக்கு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரியை முழுமையாக நீக்க கோரியும், எமனேசுவரம் நேருஜி மைதானத்தில் கைத்தறி நெசவாளர்களும், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர்களும் மூன்று நாள் வேலை நிறுத்தம் செய்தும், பட்டு ஜவுளி கடைகளை அடைத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பரமக்குடி எமனேஸ்வரம் அனைத்து கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் பெடரேஷன் தலைவர் சேஷய்யன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கோவிந்தன், செயலாளர் ருக்மாங்கதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் கோதண்டராமன் வரவேற்றார். ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பட்டு சிறு உற்பத்தி சங்கத் தலைவர் கேசவராமன், பட்டு பஜார் கடைசங்க நிர்வாகிகள் சித்து கோ.ஜனார்த்தனன், ரவீந்திரன், போராட்டக்குழுவினர் குப்புசாமி, வலது கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜன் உள்பட கைத்தறி நெசவாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story