‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள்
x
தினத்தந்தி 14 Dec 2021 12:24 AM IST (Updated: 14 Dec 2021 12:24 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பராமரிப்பு இல்லாத சுகாதார வளாகம்

கும்பகோணம் ஒன்றியம் சுந்தரபெருமாள் கோவில் பகுதி உள்ளது. இந்த பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த சுகாதார வளாகத்தை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில்  இந்த சுகாதார வளாகம் தற்போது பராமரிப்பின்றி செடிகள், கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. இதனால் அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் சுகாதார வளாகம் விஷப்பூச்சிகளின் கூடாரமாக இருந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்தபகுதியில் உள்ள சுகாதார வளாகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
-துரைராஜ், சுந்தரபெருமாள்கோவில்.

பஸ் வசதி வேண்டும்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா கணபதி அக்ரஹாரம் சுற்றியுள்ள பகுதியில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் உள்ளனர். மேலும் இந்த பகுதியில் இருந்து தினமும் பல்வேறு வேலைகளுக்காக தொழிலாளர்கள் தஞ்சைக்கு சென்று வருகின்றனர். ஆனால் இந்த பகுதியில் போதிய பஸ் வசதி இல்லாததால் அய்யம்பேட்டைக்கு சென்று தஞ்சைக்கு பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது. இதனால் அந்தபகுதி மாணவ-மாணவிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர்.  எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து போதிய பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-தமிழன் பிரபு, கணபதிஅக்ரஹாரம்.

உள்வாங்கிய சாலை

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு புதூர் பைபாஸ் சாலை உள்ளது. இந்த சாலையில் தினமும் ஏராளமானோர் பல்வேறு பணிக்களுக்காக சென்று வருகின்றனர். மேலும் அந்த சாலையில்  பாலத்தின் அருகில் உள்ள சாலை உள்வாங்கிய நிலையில் உள்ளது. இதனால் இந்த சாலையின் வழியாக செல்வோர் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மோட்டார் சைக்கிளில் வருவோர் நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர்.  மேலும் அடிக்கடி சிறிய சிறிய விபத்துகளும் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்கவேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-புதூர் பைபாஸ் சாலை பகுதி மக்கள், ஒரத்தநாடு.

Next Story