ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Dec 2021 1:10 AM IST (Updated: 14 Dec 2021 1:10 AM IST)
t-max-icont-min-icon

சாலையை சீரமைக்க வலியுறுத்தி விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர், 
விருதுநகர் - சாத்தூர் ரோட்டில் ஆர்.ஆர்.நகர் பஸ் நிறுத்தம் முதல் ஆவுடையாபுரம் வரை உள்ள சேவை ரோட்டை சீரமைக்க பல முறை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் வலியுறுத்தி கூறியும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நேற்று அப்பகுதியினர் முன்னாள் மாவட்ட தி.மு.க. கவுன்சிலர் தேவராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் பாலமுருகன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு, தி.மு.க., மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story