ஊதிய நிலுவை வழங்க கோரிக்கை
அனைத்து தற்காலிக பல்நோக்கு மருத்துவ பணியாளர்களுக்கு நிலுவை வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர்,
அனைத்து தற்காலிக பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- நாங்கள் கொரோனா பணிக்காக கடந்த மே மாதம் மாவட்ட கலெக்டரால் தேர்வு செய்யப்பட்டு தற்காலிக பல்நோக்கு மருத்துவமனை பணியாளராக தொகுப்பூதிய அடிப்படையில் 6 மாத காலத்திற்கு தேர்வு செய்யப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி அமர்த்தப்பட்டோம். தற்போது எங்களுக்கான பனிக்காலம் முடிவடைந்து விட்ட நிலையில் எங்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு எங்கள் பணியில் கால அளவை நீட்டிப்பு செய்து கொடுக்குமாறு வேண்டுகிறோம். மேலும் கடந்த மூன்று மாத சம்பளம் நிலுவையில் உள்ளது. அரசாணைப்படி சம்பளம் வழங்கவும், கொரோனா காலத்தில் மே மாதம் முதல் ஜூன் மாதம் வரை பணியில் இருந்ததால் ஊக்கத் தொகையும் வழங்க வேண்டுகிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story