மரத்தில் கார் மோதி வாலிபர் பலி


மரத்தில் கார் மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 14 Dec 2021 1:53 AM IST (Updated: 14 Dec 2021 1:53 AM IST)
t-max-icont-min-icon

பாப்பாக்குடி அருகே மரத்தில் கார் மோதி வாலிபர் பலியானார்.

முக்கூடல்:
பாப்பாக்குடி அருகே மரத்தில் கார் மோதி வாலிபர் பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.

நண்பர்கள்
கன்னியாகுமரி மாவட்டம் தாமரைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சகாய அலெக்ஸ் மகன் மஸ்கிரியன் (வயது 24). இவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்தவர் பிரின்ஸ் (23). இவர்கள் 2 பேரும் ஸ்டூடியோவில் வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் புகைப்படம் எடுப்பதற்காக 2 பேரும் ஒரு காரில் நேற்று அதிகாலை வந்து கொண்டு இருந்தனர். காரை மஸ்கிரியன் ஓட்டினார்.

ஒருவர் பலி
பாப்பாக்குடி அருகே செங்குளம் விலக்கு பகுதியில் வந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இதில் காரில் இருந்த 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள்.
இதுகுறித்து உடனடியாக பாப்பாக்குடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து 2 ேபரையும் மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மஸ்கிரியன் பரிதாபமாக இறந்தார். பிரின்சுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story