சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த லாரி டிரைவருக்கு 3 ஆண்டு சிறை


சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த லாரி டிரைவருக்கு 3 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 14 Dec 2021 1:58 AM IST (Updated: 14 Dec 2021 1:58 AM IST)
t-max-icont-min-icon

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த லாரி டிரைவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

பெரம்பலூர்:

பாலியல் தொந்தரவு
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, கொட்டரை மேற்கு தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன்(வயது 44). லாரி டிரைவரான இவர் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ந்தேதி 14 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாகவும், மனரீதியாகவும் தொந்தரவு கொடுத்ததாக பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி கிரி நேற்று தீர்ப்பு கூறினார்.
3 ஆண்டு சிறை
அதில் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் 3 பிரிவுகளின் கீழ் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், 2 பிரிவுகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் அபராதமும், ஒரு பிரிவிற்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்ட தவறினால் கூடுதலாக 4 மாதம் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்றும், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து அபராத தொகையை கட்டிவிட்டு, தேவேந்திரன் ஜாமீனில் வெளியே வந்தார்.

Next Story