தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆய்வு
தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆய்வு
மதுரை
தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் மதுரை கோட்டத்தில் நேற்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மதுரை ரெயில் நிலையம், டிக்கெட் கவுண்ட்டர், பார்சல் அலுவலகம், சிக்னல் அறை, நடை மேம்பாலம் ஆகியவற்றை ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மதுரை ரெயில் நிலையம் 2 மாடி கட்டிடமாக மாற்றப்படவுள்ளது குறித்தும், ரெயில் நிலையத்தில் இருந்து பெரியார் பஸ் நிலையத்துக்கு சுரங்கப்பாதை அமைப்பது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, மதுரை-திருச்சி இடையேயான இரட்டை அகலப்பாதையில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, முதன்மை வர்த்தக மேலாளர் ரவி வல்லூரி, முதன்மை இயக்க மேலாளர் ஸ்ரீகுமார், முதன்மை என்ஜினீயர் பிரபுல்ல வர்மா, மதுரை கோட்ட மேலாளர் பத்மநாபன் ஆனந்த் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். முன்னதாக, மதுரை ரெயில்வே ஆஸ்பத்திரி, வர்த்தக்கப்பிரிவு, இயக்கப்பிரிவு, மின்மயமாக்கல் பிரிவு ஆகியவற்றின் சிறப்பான செயல்பாடுகளுக்கான குழு விருது வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோட்ட மேலாளர் அலுவலக நடைமுறை ஆய்வாளர் ராதா செய்திருந்தார்.
Related Tags :
Next Story