ரூபாய் நோட்டுகளை கீழே வீசி கட்டிட மேஸ்திரியிடம் ரூ60 ஆயிரம் அபேஸ் மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


ரூபாய் நோட்டுகளை கீழே வீசி கட்டிட மேஸ்திரியிடம் ரூ60 ஆயிரம் அபேஸ் மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 14 Dec 2021 2:15 AM IST (Updated: 14 Dec 2021 2:15 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அருகே ரூபாய் நோட்டுகளை கீழே வீசி கட்டிட மேஸ்திரியிடம் ரூ 60 ஆயிரத்தை மர்ம நபர்கள் அபேஸ் செய்தனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நல்லம்பள்ளி:
தர்மபுரி அருகே ரூபாய் நோட்டுகளை கீழே வீசி கட்டிட மேஸ்திரியிடம் ரூ 60 ஆயிரத்தை மர்ம நபர்கள் அபேஸ் செய்தனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கட்டிட மேஸ்திரி
தர்மபுரியை அடுத்த ஒட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது55) கட்டிட மேஸ்திரி. இவர் ஒட்டப்பட்டியில் ஒரு வங்கியில் இருந்து ரூ.60 ஆயிரத்தை எடுத்து கொண்டு மொபட்டில் வீட்டுக்கு சென்றார். அப்போது அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் வந்தனர்.  ஒட்டப்பட்டி ஊருக்குள் வந்த அந்த நபர்கள் ரூபாய் நோட்டுகளை கீழே போட்டனர். 
பின்னர் அந்த நபர்கள் ரூபாய் நோட்டுகளை கீழே போட்டு செல்வதாக நடராஜனிடம் கூறினர். இதனால் அவர் மொபட்டை நிறுத்தி விட்டு கீழே கிடந்த ரூபாய் நோட்டுகளை எடுக்க முயன்றார். அப்போது அந்த நபர்கள் நடராஜன் மொபட்டில் வைத்திருந்த ரூ.60 ஆயிரத்தை அபேஸ் செய்து கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர். 
வலைவீச்சு
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அதியமான்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கட்டிட மேஸ்திரியை திசை திருப்பி ரூ.60 ஆயிரத்தை அபேஸ் செய்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story