625 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.34¼ கோடி நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்
625 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.34¼ கோடி நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
தேனி:
தமிழகத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நேற்று நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கிய இந்த விழாவின் நேரடி ஒளிபரப்பு மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தேனியில் நடந்தது. காணொலி காட்சி மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்த விழாவின் போது பயனாளிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். பின்னர், தேனி மாவட்டத்தில் உள்ள 625 மகளிர் சுயஉதவிக்குழுக்களை சேர்ந்த 6 ஆயிரத்து 923 உறுப்பினர்களுக்கு ரூ.34 கோடியே 39 லட்சம் மதிப்பில் கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் முரளிதரன் வழங்கினார். விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், மகாராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, மகளிர் திட்ட அலுவலர் ரூபன் சங்கர்ராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story