காஞ்சீபுரத்தில் கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவி குழு கடன்களுக்கு வட்டி குறைப்பு
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
2021-2022 ஆம் ஆண்டிற்கான கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கையின்போது, கூட்டுறவுத்துறை அமைச்சர், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்களில் ரூ.3 லட்சம் வரையிலான கடன்களுக்கு வட்டி விகிதம் 12 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக குறைக்கப்படும் என்றும், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் அளவு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்படும் என்றும் அறிவிப்பினை வெளியிட்டார்.
இந்த அறிவிப்பினை செயல்படுத்துவதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச கடன் வரம்பினை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தி வழங்க மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகர கூட்டுறவு வங்கிகளுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் நடப்பாண்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன்கள் வழங்கிட ரூ.35 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, அதன்படி கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story