தேர்தல் தகராறில் தி.மு.க. பிரமுகர் சாவு 9 மாதங்களுக்கு பிறகு அ.தி.மு.க. பிரமுகர் கைது ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி
ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து, தேர்தல் தகராறில் தி.மு.க. பிரமுகர் இறந்த 9 மாதங்களுக்கு பிறகு அ.தி.மு.க பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
உத்தமபாளையம்:
சின்னமனூர் 27-வது வார்டு பள்ளிகோட்டைபட்டியில் கடந்த மார்ச் மாதம் 6-தேதி நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த தி.மு.க.வை சேர்ந்த மயில்வேல் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தி.மு.க தரப்பில் 11 பேர் மீதும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த பிச்சைமுத்து, அவரது மகன் நிதிஷ்குமார், சுருளி மகன் பிரதீஸ் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை. எடுக்கப்படவில்லை. இதையடுத்து அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இறந்த மயில்வேலின் மகள் ரீனா தேவி மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார் இந்த வழக்கை ஐகோர்ட்டு விசாரித்து பிச்சைமுத்து, நிதிஷ்குமார், பிரதீஸ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சின்னமனூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் சேகர் விசாரணை நடத்தி 9 மாதங்களுக்கு பிறகு பிரதீஸை கைது செய்தார். தலைமறைவாக உள்ள பிச்சைமுத்து, நிதிஷ் குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story