தேனியில் பிரேக் பிடிக்காததால் கடைகளுக்குள் புகுந்த டிராக்டர் 4 பேர் காயம்
தேனியில் பிரேக் பிடிக்காததால் கடைகளுக்குள் டிராக்டர் புகுந்தது. இதில் 4 பேர் காயம் அடைந்தனர்.
தேனி:
தேனி அருகே ஊஞ்சாம்பட்டியை சேர்ந்தவர் ரவி (வயது 42). டிராக்டர் டிரைவர். இவர் நேற்று தேனி எம்.ஜி.ஆர். நகரில் இருந்து சமதர்மபுரம் நோக்கி டிராக்டரை ஓட்டி வந்தார். அதில் தொழிலாளர்கள் சிலர் அமர்ந்து வந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் பிரேக் பிடிக்காமல் சாலையோரம் இருந்த சைக்கிள் மற்றும் ஐஸ்கிரீம் கடைகளுக்குள் புகுந்தது. இதில் அந்த கடைகளில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்தன. மேலும், இந்த விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்த ஆனந்தன் (34), பாண்டி (26), அல்லிநகரத்தை சேர்ந்த பிச்சை (63), டிரைவர் ரவி ஆகிய 4 பேரும் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டனர். சம்பவம் பற்றி அறிந்ததும் தேனி போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தின் போது கடைகளில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story